News & Events

  • Home
  • News & Events
  • ஆசிய பசிபிக் லாப்பிராஸ்கோப்பி குழுவுக்கு டாக்டர் செந்தில்நாதன் தேர்வு
image
Dr. Senthilnathan selected as member of Asia Pacific Laparoscopy Committee

ஆசிய பசிபிக் லாப்பிராஸ்கோப்பி குழுவுக்கு டாக்டர் செந்தில்நாதன் தேர்வு

ஆசிய பசிபிக் லாப்பிராஸ்கோப்பி குழுவின் தலைவர் டாக்டர் ஜீயேபிங்சென்னிடம் இருந்து சான்றிதழ் பெறுகிறார் ஜெம் மருத்துவமனை மருத்துவர் பி.செந்தில்நாதன்.

கோவை, ஜூன் 23: ஜெம் மருத்துவமனை கல்லீரல் மற்றும் கணைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.செந்தில்நாதன், ஆசிய பசிபிக் லாப்பிராஸ்கோப்பி குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கல்லீரல், கணையம் சிகிச்சை அமைப்பின் சார்பில் ஆசிய பசிபிக் நாடுகளில் லாப்பிராஸ்கோப்பி கல்லீரல் அறுவை சிகிச்சை முறையினை பிரபலமடைய ஆய்வு மேற்கொள்ளவும், வளர்ச்சியடைய செய்யவும் சிறப்பு நிபுணர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்குழுவின் முதல் மாநாடு சீனா நாட்டின் ஊகான் நகரில் நடை பெற்றது. இக்குழுவில் 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில், ஜெம் மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் கணைய அறுவை சிகிச்சை நிபுரணர் டாக்டர் பி.செந்தில்நாதன் இடம்பெற்றுள்ளார்.

இவர், கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய், சுருக்கம், நீர்க் கட்டிகள் போன்ற பாதிப்புகளுக்கு லாப்பிராஸ்கோப்பி மூலம் அதிகளவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

தேர்வு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிபுணர் குழுவின் அடுத்த மாநாடு கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக டாக்டர் செந்தில்நாதன் தெரிவித்தார்.

whatsapp-icon
call-nowCall Now WhatsApp WhatsApp Book Appointment Book Appt.