News & Events

  • Home
  • News & Events
  • மெக்ஸிகோ மாநாட்டில் ஜெம் மருத்துவர் பங்கேற்பு
image
GEM hospital doctor attending medical conference in Mexico

மெக்ஸிகோ மாநாட்டில் ஜெம் மருத்துவர் பங்கேற்பு

கோவை, ஏப்.24: மெக்ஸிகோவில் நடைபெறும் சர்வதேச எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை மாநாட்டில், கோவை ஜெம் மருத்துவமனை மருத்துவர் பி.செந்தில்நாதன் (படம்) பங்கேற்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை மாநாடு, இம்முறை மெக்ஸிகோவில் உள்ள பியூரோ வல்லர்ட்டாவில் ஏப்.23-ல் துவங்கியது. வரும் 27-ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது.

இரைப்பையில் சுரக்கும் அமிலம், உணவுக்குழாயில் மேல் நோக்கி வருவதால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, வயிற்றுப் பகுதியில் துளையிட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது குறித்து இவர் உரையாற்றுகிறார். இரைப்பை அமில சுழற்சி நோய்க்கான அறுவைச் சிகிச்சை தொழில்நுட்பரீதியாக சிக்கலானதாகவும், கடினமானதாகவும் இருந்தது.

இவற்றைத் தவிர்த்து எளிய முறை அறுவைச் சிகிச்சையை ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சையில் சிறு கீறல் போன்ற தழும்பு தொப்புள் பகுதியில் மட்டும் இருக்கும்.

இச்சிறப்பு சிகிச்சையில் முன்னோடியாக உள்ள டாக்டர் பி.செந்தில்நாதன், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடை பெற்ற சர்வதேச குடல் இறக்கம் குறித்த மாநாட்டில் நேரடி செயல் விளக்கமளித்தார்.

மெக்ஸிகோவில் நடைபெறும் மாநாட்டில் மெக்ஸிகன் எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை சங்கத்தில் டாக்டர் செந்தில்நாதன் உரையாற்றுகிறார். மண்ணீரல், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோயை ஒருதுளை லேப்ராஸ்கோபி முறையில் அகற்றும் முறை, சர்வதேச அளவில் லேப்ராஸ்கோபி முறை அறுவைச் சிகிச்சையில் இந்தியாவின் சாதனை குறித்தும் டாக்டர் பி.செந்தில்நாதன் பேச உள்ளதாக, ஜெம் மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவிக் கிறது.

whatsapp-icon
call-nowCall Now WhatsApp WhatsApp Book Appointment Book Appt.