News & Events

  • Home
  • News & Events
  • ஜெம் மருத்துவமனை அறிமுகப்படுத்தும் கணைய கோளாறுகளுக்கான 24x7 ஹெல்ப் லைன்
image
ஜெம் மருத்துவமனை அறிமுகப்படுத்தும் 24x7 ஹெல்ப் லைன் கணைய கோளாறு நோயாளிகளுக்காக

ஜெம் மருத்துவமனை அறிமுகப்படுத்தும் கணைய கோளாறுகளுக்கான 24x7 ஹெல்ப் லைன்

டிசம்பர் 4, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை இலவச மஞ்சள் காமாலை பரிசோதனை முகாம்

சென்னை: இந்தியாவின் முதன்மையான காஸ்ட்ரோ என்டரோலஜி. லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, கணைய நோய்க்கான விழிப்புணர்வை அதிகரிப்பதையும், கணையக் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு முக்கியமான ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய முயற்சிகளை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. 24 மணி நேரமும் பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்கான ஒரு படியாக, கணையக் கோளாறுகளுக்கான 24×7 ஹெல்ப் லைனை ஜெம் மருத்துவமனை தொடங்கியுள்ளது. இந்த பிரத்யேக உதவி எண் கணைய அழற்சி மற்றும் கணைய புற்றுநோய் உள்ளிட்ட கணைய நோய்கள் தொடர்பான அறிகுறிகளை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைகளை வழங்கும். 24 மணி நேர உதவி எண்: 70920 51931

ஜெம் மருத்துவமனை டிசம்பர் 4. 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை கணைய நோய்களுக்கான இலவச விழிப்புணர்வு முகாமையும் நடத்துகிறது. கணையக் கோளாறுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கொண்ட நபர்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாம். நோயாளிகளுக்கு இலவச மஞ்சள் காமாலை பரிசோதனையை வழங்கும். அறிகுறிகளை அனுபவிக்கும் அனைத்து நோயாளிகளுக்கும் இந்த முகாம் திறந்திருக்கும். மேலும், இந்த பரிசோதனையானது ஆரம்பகால அறிகுறிகளை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள உதவும். முகாமில் பங்கு பெற நோயாளிகள் தங்கள் சந்திப்பை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம். ஜெம் மருத்துவமனைகளின் தலைவரும் நிறுவனருமான டாக்டர் சி. பழனிவேலு கூறுகையில், "நகரத்தில் கணைய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கள் மருத்துவர்கள் குழு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுணைய புற்றுநோய்களுக்கு 6 வெவ்வேறு லேபராஸ்கோபிக், ரோபோடிக் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர். ஜெம் மருத்துவமனை கணைய புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் ஆதரவின் அவசியத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தீவிரமான நோயைப் பற்றி பொதுமக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம். இதனால் அவர்கள் அறிகுறிகளை புறக்கணிக்காமல், சரியான நேரத்தில் சிறந்த அறுவை சிகிச்சையைப் பெறுவதற்கு முன்கூட்டியே தங்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம். மஞ்சள் காமாலை (தோல் மற்றும்/அல்லது கண்களின் மஞ்சள் நிறம்) அசாதாரண எடை இழப்பு, வயிற்று வலி, பசியின்மை. குமட்டல், மலம் மாறுதல் மற்றும் புதிதாகத் தொடங்கும் நீரிழிவு போன்ற அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது ",என்றார்.

ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பி.செந்தில்நாதன் பேசுகையில், “புதிதாக தொடங்கப்பட்ட 24×7 ஹெல்ப்லைனில் ஜெம் மருத்துவமனையிலிருந்து தகுதி வாய்ந்தநிபுணர்கள் நோயாளிகளுடன் உரையாடி அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள். எங்களின் 24 மணி நேர உதவி எண். பகல் அல்லது இரவு நேரம் எதுவாக இருந்தாலும், நோயாளிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதில் உறுதியாக இருக்கும்”

மேலும் அவர் கூறுகையில். "மஞ்சள் காமாலை என்பது கணைய புற்றுநோயின் மிக முக்கியமான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்றாகும் என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண ஜெம் மருத்துவமனை ஒரு மாதகால இலவச மஞ்சள் காமாலை பரிசோதனை முகாமை நடத்துகிறது. மஞ்சள் காமாலை நோயுடன், கணையக் கற்கள், கணைய அழற்சி மற்றும் கணைய நீர்க்கட்டிகள் போன்ற பல்வேறு கணையக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் இந்த முகாமில் இலவசமாக பரிசோதிக்கப்படுவார்கள். கூடுதலாக ஜெம்மருத்துவமனையின் வல்லுநர்கள் ஏற்கனவே கணைய புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இலவச ஆலோசனை/இரண்டாவது கருத்தை வழங்குவார்கள்", என்றார்.

whatsapp-icon
call-nowCall Now WhatsApp WhatsApp Book Appointment Book Appt.