News & Events

  • Home
  • News & Events
image
Founder Dr. C. Palanivelu inaugurates stomach and colon cancer screening consultation at GEM Hospital

ஜெம்மருத்துவமனையில் குடல், வயிறு புற்றுநோய் பரிசோதனை ஆலோசனை : நிறுவனர் டாக்டர் சி.பழனிவேலு து

சென்னை, மார்ச் 17 - இந்தியாவின் முதன்மையான குடல், வயிறு லேப்ராஸ்கோபிக் மற்றும் சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவமனை சென்னை ஜெம் மருத்துவமனை குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை கடைப்பிடிக்கும் வகையில் பெருங்குடல் நோய்களுக்கான சிகிச்சை ஆலோசனை உதவி திட்டத்தை துவக்கியது.

இந்த முன்முயற்சி மூலம் பெருங்குடல் நோய்கள் தொடர்பான தங்கள் கேள்விகளை சென்னை ஜெம் மருத்துவமனையின் பேஸ்புக் (@gemhospitalchennai) மற்றும் இன்ஸ்டாகிராம் சேர்ந்த வல்லுநர்கள் ஒவ்வொரு கேள்வியையும் ஆய்வு செய்து 24 மணி நேரத்திற்குள் விரிவான பதிலை அனுப்புவார். இது நோயாளிகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லாமலேயே அவர்களின் நல்வாழ்வைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள உதவும் என்று gem hospital chennai) போன்ற சமூக 20 பக்கங்களில் நோயாளிகள் பதிவிட முடியும். அந்தந்த துறைகளை நிறுவனர் டாக்டர். சி.பழனிவேலு தெரிவித்தார்.

2025 மார்ச் 31 -ம் தேதி வரை மலச்சிக்கல், ஃபிஸ்துலா, பெருங்குடல் புற்றுநோய் போன்ற பெருங்குடல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை செய்ய நோயாளிகளை அனுமதிக்கும் முன்முயற்சியையும் நாங்கள் தொடங்குகிறோம்.

ஜெம் மருத்துவமனையில் சுமார் 100 பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சை பெற்று மீண்ட வீரர்கள் தங்களின்அனுபவத்தையும், தற்போது அனுபவித்து வரும் வாழ்க்கை தரத்தையும் பகிர்ந்து கொண்டனர். புதிதாக புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தைரியமாக சிகிச்சைகளை மேற்கொள்ள இது நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கிறது என்றார். சி.பழனிவேலு மேலும்கூறுகையில், பெருங்குடல் புற்றுநோய்க்கான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. கடந்த 30 ஆண்டுகளில் 5500-க்கும் மேற்பட்ட லேப்ராஸ்கோபிக் பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் டாக்டர் செய்துள்ளோம் என்றார்.

தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ். அசோகன் கூறுகையில், 

“ இந்தியாவில் அடிக்கடி பதிவாகும் புற்றுநோய் பாதிப்புகளில் முதல் ஐந்து இடங்களில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் உள்ளன. சிக்கலான பெருங்குடல் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உயர் வரையறை லேப்ராஸ்கோபிக் சிஸ்டம் மற்றும் டாவின்சி ரோபோடிக் சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன தொழில்நுட்பங்களின் உள்கட்டமைப்பு முன்னேற்றத்துடன், நோயாளிகள் குறைந்த தழும்புகள், குறைந்த வலி மற்றும் செலவு குறைந்த முறைகள் மூலம் விரைவாக குணமடைவதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் உறுதிசெய்ய முடியும் என்றார்".

சென்னை ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பி.செந்தில்நாதன் பெருங்குடல் துறைத் தலைவர் டாக்டர். பினக் தாஸ்குப்தாஉடன் இருந்தனர்.

whatsapp-icon
call-nowCall Now WhatsApp WhatsApp Book Appointment Book Appt.